Tuesday, December 28, 2010

my lover!



அழகு இரவு வானில்
ஒரு பௌர்ணமி நாளில்
என்னவளை நிலவாய் கண்டேன்!
அருகிலுருந்தாலோ முத்தமழை
பொழிந்திருப்பேன்!
அருகில் செல்ல இயலவில்லை!

கவலை படவில்லை நான்!
முத்ததினும்  இனிமையாய்
கவிதை மழை பொழிந்ததால்!
  கவலை படவில்லை அவளும்!
கவிதையினும் அழகாய்
காதல் மழை பொழிந்ததால்!

தென்றலும் புயலும்!

தோல்வி எனும் புயலடித்தால்
வாழ்வில் சில பூ உதிரும்!
வெற்றி எனும் தென்றல் வந்து
மீண்டும் அதை பூக்க வைக்கும்!
சில பூக்கள் உதிர்ந்தால் என்ன?
கலங்காதே நண்பா!
புயல் இங்கு வந்தாலும்
மறுநாளே அடங்கி விடும்
தென்றல் உன்னை தொட்டாலே
நெஞ்சில் மகிழ்ச்சி பூப்பூக்கும்
புயலே வந்தாலும்
துணிந்து எதிர்கொள்
தென்றல் உன்னை தொட்டாலே
மயங்காமல் மகிழ்ச்சிகொள்
சூழ்ந்து வந்த புயலினால்
அவமான தூசி படரும்
தூசி தட்டி சென்று விடு!
வெற்றி கொடி நட்டு விடு!
வெற்றியெனும் தென்றல் இங்கு
மாறி மாறி வீசுமடா!
அது உன்னை தொட்ட போதுமட்டும்
உலகம் உன்னை பேசுமடா!
அந்த பேச்சில் மயங்கிடாதே!
கர்வதினில் கரைந்திடாதே!
உச்சிக்கால வெயிலினிலே
தென்றல் காற்று வீசிடாது!
வெற்றியிலே வரும் கர்வம்
உன்னை கரை சேர்த்திடாது!

இன்னும் எனும் தேடல்!

கற்றதெல்லாம் உமியளவு!
கற்காதது உலகளவு!
பெற்றதெல்லாம் போதாது
என எண்ணி தொடங்கும் தேடல்!
பணமெல்லாம் போதாதென
சூளுரைக்கும் பலமனம்!
அறிவெல்லாம் போதாதென
தேடல் தொடங்கும் சிலமனம்!
 எடிசன் எனும் ஒரு மனிதர்
போதுமென நினைத்திருந்தால்
உலகிற்கு ஒளி பிறந்திருக்குமா?
இயேசு எனும் ஒரு மனிதர்
போதுமென நினைத்திருந்தால்
அன்பின் அரும்பு மலர்ந்திருக்குமா?
பாரதி என்னும் ஒரு மனிதர்
போதுமென நினைத்திருந்தால்
புரட்சி கவிதைகள் தோன்றியிருக்குமா?
காந்தி எனும் ஒரு மனிதர்
போதுமென நினைத்திருந்தால்
அஹிம்சை என்னும் அறவழி
அரும்பியிருக்குமா?
எறும்பு கூட்டத்தின் உணவு தேடல்!
தேனீகூட்டத்தின் மலர் தேடல்!
கணிப்பொறியின் முன் வலை தேடல்!
இயக்குனரின் கதை தேடல்!
இவையெல்லாம் முடிந்தாலும்
முடியாது என் கவித்தேடல்!
வெற்றி என்பது பெற்றிட!
தோல்வி என்பது கற்றிட!
இவை இரண்டையும் வென்றிட
இன்னும் எனும் தேடல்!
நீங்களும் தேடுங்கள்!
வளமான வாழ்வை நோக்கி!

Sunday, December 19, 2010

en ezhuthu en deivam

அன்றாடம் அவலங்கள்
சமுதாய சீரழிவுகள்
தட்டிக்கேட்க துடித்தேன்
கண்டும் காணமல் நடித்தேன்
அரிவாள் எடுக்க அஞ்சவில்லை
அன்பு குடும்பத்திற்காக தயங்கினேன்
தயங்கியதோடு நிற்கவில்லை
எழுத்தால் வெள்ளையனையே
விரட்டியடித்த
பாரதியின் கைப்பிடித்தேன்
ஆயுதமாய் எழுதுகோல்
எடுத்தேன்!
என் எழுத்து யாவற்றையும்
திருத்துமோ இல்லையோ?
திருந்துபவர்கள் திருந்தட்டும்!
அதுவரை என் எழுதுகோல்
எழுதட்டும்!
என் எழுத்து தொடரட்டும்!

Saturday, December 18, 2010

birthday celebration

ஆயிரம் ரூபாய் செலவழிக்கவில்லை
நண்பர்களுடன்!
நாள் முழுவதும் சுற்றவில்லை
காதலியுடன்!
ஒருவேளை பசி போக்கினேன்
ஆதரவற்ற நான்கு முதியோர்களுக்கு!

மனித நேயத்துடன்
மகிழ்வான பிறந்த நாள் கொண்டாட்டம்

mosquito's request


இரத்த தானம்
செய்யுங்கள் எனக்கு!

கொசுவர்த்தி கொளுத்தாமல்!

value of time

காலம் பொன் போன்றது
தவறினால் நீயும்
என்னை போலத்தான்.....

-கருகிப் போன தோசை

ambulance driver


பணத்திற்காக அல்ல
பந்தயத்திற்காக அல்ல
போராடும் உயிர்களை
காக்கவே
தினம் தினம் ஒட்டுகிறேன்!
வேகமாக......!
ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் மனித நேயம்

eezham

வெள்ளைகாரன் ஒருவேளை
சிங்களனை போல்
இருந்திருந்தால் ஏது
சுதந்திரம் நமக்கு......!

marana sadangil manitha neyam

சோறுபோட்ட நன்றியில்
அழுகிறது நாய்
சொத்துக்காக அடித்து
கொள்கிறார்கள் பிள்ளைகள்
மரண சடங்கில்
மறைந்து போன மனிதநேயம்

 

kadhal kavithai

அதுவரை பார்த்ததில்லை
அத்தனை அழகை!
ஆசை காதலி முகத்தில்
கல்யாணக்கலை!
காதலன் இருப்பதோ
கல்லறை!
படைக்காதே கடவுளே
இது போன்ற பெண்களை!

--காதலால் கசிந்து போன கவிஞனாய்