Tuesday, December 28, 2010

இன்னும் எனும் தேடல்!

கற்றதெல்லாம் உமியளவு!
கற்காதது உலகளவு!
பெற்றதெல்லாம் போதாது
என எண்ணி தொடங்கும் தேடல்!
பணமெல்லாம் போதாதென
சூளுரைக்கும் பலமனம்!
அறிவெல்லாம் போதாதென
தேடல் தொடங்கும் சிலமனம்!
 எடிசன் எனும் ஒரு மனிதர்
போதுமென நினைத்திருந்தால்
உலகிற்கு ஒளி பிறந்திருக்குமா?
இயேசு எனும் ஒரு மனிதர்
போதுமென நினைத்திருந்தால்
அன்பின் அரும்பு மலர்ந்திருக்குமா?
பாரதி என்னும் ஒரு மனிதர்
போதுமென நினைத்திருந்தால்
புரட்சி கவிதைகள் தோன்றியிருக்குமா?
காந்தி எனும் ஒரு மனிதர்
போதுமென நினைத்திருந்தால்
அஹிம்சை என்னும் அறவழி
அரும்பியிருக்குமா?
எறும்பு கூட்டத்தின் உணவு தேடல்!
தேனீகூட்டத்தின் மலர் தேடல்!
கணிப்பொறியின் முன் வலை தேடல்!
இயக்குனரின் கதை தேடல்!
இவையெல்லாம் முடிந்தாலும்
முடியாது என் கவித்தேடல்!
வெற்றி என்பது பெற்றிட!
தோல்வி என்பது கற்றிட!
இவை இரண்டையும் வென்றிட
இன்னும் எனும் தேடல்!
நீங்களும் தேடுங்கள்!
வளமான வாழ்வை நோக்கி!

2 comments:

  1. பணமெல்லாம் போதாதென
    சூளுரைக்கும் பலமனம்!
    அறிவெல்லாம் போதாதென
    தேடல் தொடங்கும் சிலமனம்!

    ReplyDelete
  2. Ithu thaana ne ezhdhi prize vaanguna first kavithai......?
    inum gnabagam irukku.School la kavithai potti nu name list kekka vanthapo ellarum hesistate panitrunthom.apa miss madasamy kavithai nalla ezudhuvan misss...misss...misss..nu ezhutha vajathu.miss apana ipave class situation ah kavithaya ezhudhuda nu ketadhu....ne eludhunathu...cha.marakathu la.......?

    CAN WE SAY THAT THIS ART CAME INTO YOU AND EXPLORED TO THE WORLD THROUGH OURS(FRIENDS)????

    ReplyDelete