Tuesday, August 16, 2011

மழை விடு தூது!

மழையினை தூது விட்டாளோ?
ஒவ்வொரு துளியிலும் 
அவள் முகம்!
தரையினை தொடுகையில்
அவள் குரல்!
மின்னல் அடிக்கையில் 
அவள் குரல்!


இடி இடிக்கையில்
அவள் பேச்சு!
மண் தொடும்போது 
அவள் வாசம்!
குளிர்காற்று மேனி தொட்டபோது 
அவள் முத்தம்!
மழையே நின்று விடாதே
என் தாகம் தீரும் வரை!
உன்னை தூது விட்டவள்
என்னை சேரும் வரை! 

Tuesday, August 9, 2011

என் அழகு காதலி !

காதல் மகாராணி
கவிதைத்தேரில் வர
கவிஞன் நான் எழுதினேன்!

என் கவிதைகள்
அவளை அலங்கரித்து
ஊரையே அசத்தினாலும்
ஒன்று கூட அவளை விட
அழகாய் இல்லை........!

Tuesday, July 12, 2011

என்னவள்!

கண்கள் அவளுடையது!
ஆனால் அது கொண்ட காதல்
என்னுடையது!
கூந்தல் அவளுடையது!
ஆனால் அதைப்போல்
அலை பாயும் மனம் என்னுடையது!

உடல் தான் அவளுடையது!
அதனுள்ளே உயிர் என்னுடையது!
என்னை தொட்டு செல்லும்
காற்றுக்கும் உயிருண்டு
ஒருவேளை அது
அவள் சுவாசமாக இருந்திருந்தால்!
 நான் எழுதும் கவிதைகளுக்கும்
உயிருண்டு!
ஒருவேளை அதன் கருப்பொருளாய்
அவள் இருந்தால்!

Tuesday, December 28, 2010

my lover!



அழகு இரவு வானில்
ஒரு பௌர்ணமி நாளில்
என்னவளை நிலவாய் கண்டேன்!
அருகிலுருந்தாலோ முத்தமழை
பொழிந்திருப்பேன்!
அருகில் செல்ல இயலவில்லை!

கவலை படவில்லை நான்!
முத்ததினும்  இனிமையாய்
கவிதை மழை பொழிந்ததால்!
  கவலை படவில்லை அவளும்!
கவிதையினும் அழகாய்
காதல் மழை பொழிந்ததால்!

தென்றலும் புயலும்!

தோல்வி எனும் புயலடித்தால்
வாழ்வில் சில பூ உதிரும்!
வெற்றி எனும் தென்றல் வந்து
மீண்டும் அதை பூக்க வைக்கும்!
சில பூக்கள் உதிர்ந்தால் என்ன?
கலங்காதே நண்பா!
புயல் இங்கு வந்தாலும்
மறுநாளே அடங்கி விடும்
தென்றல் உன்னை தொட்டாலே
நெஞ்சில் மகிழ்ச்சி பூப்பூக்கும்
புயலே வந்தாலும்
துணிந்து எதிர்கொள்
தென்றல் உன்னை தொட்டாலே
மயங்காமல் மகிழ்ச்சிகொள்
சூழ்ந்து வந்த புயலினால்
அவமான தூசி படரும்
தூசி தட்டி சென்று விடு!
வெற்றி கொடி நட்டு விடு!
வெற்றியெனும் தென்றல் இங்கு
மாறி மாறி வீசுமடா!
அது உன்னை தொட்ட போதுமட்டும்
உலகம் உன்னை பேசுமடா!
அந்த பேச்சில் மயங்கிடாதே!
கர்வதினில் கரைந்திடாதே!
உச்சிக்கால வெயிலினிலே
தென்றல் காற்று வீசிடாது!
வெற்றியிலே வரும் கர்வம்
உன்னை கரை சேர்த்திடாது!

இன்னும் எனும் தேடல்!

கற்றதெல்லாம் உமியளவு!
கற்காதது உலகளவு!
பெற்றதெல்லாம் போதாது
என எண்ணி தொடங்கும் தேடல்!
பணமெல்லாம் போதாதென
சூளுரைக்கும் பலமனம்!
அறிவெல்லாம் போதாதென
தேடல் தொடங்கும் சிலமனம்!
 எடிசன் எனும் ஒரு மனிதர்
போதுமென நினைத்திருந்தால்
உலகிற்கு ஒளி பிறந்திருக்குமா?
இயேசு எனும் ஒரு மனிதர்
போதுமென நினைத்திருந்தால்
அன்பின் அரும்பு மலர்ந்திருக்குமா?
பாரதி என்னும் ஒரு மனிதர்
போதுமென நினைத்திருந்தால்
புரட்சி கவிதைகள் தோன்றியிருக்குமா?
காந்தி எனும் ஒரு மனிதர்
போதுமென நினைத்திருந்தால்
அஹிம்சை என்னும் அறவழி
அரும்பியிருக்குமா?
எறும்பு கூட்டத்தின் உணவு தேடல்!
தேனீகூட்டத்தின் மலர் தேடல்!
கணிப்பொறியின் முன் வலை தேடல்!
இயக்குனரின் கதை தேடல்!
இவையெல்லாம் முடிந்தாலும்
முடியாது என் கவித்தேடல்!
வெற்றி என்பது பெற்றிட!
தோல்வி என்பது கற்றிட!
இவை இரண்டையும் வென்றிட
இன்னும் எனும் தேடல்!
நீங்களும் தேடுங்கள்!
வளமான வாழ்வை நோக்கி!

Sunday, December 19, 2010

en ezhuthu en deivam

அன்றாடம் அவலங்கள்
சமுதாய சீரழிவுகள்
தட்டிக்கேட்க துடித்தேன்
கண்டும் காணமல் நடித்தேன்
அரிவாள் எடுக்க அஞ்சவில்லை
அன்பு குடும்பத்திற்காக தயங்கினேன்
தயங்கியதோடு நிற்கவில்லை
எழுத்தால் வெள்ளையனையே
விரட்டியடித்த
பாரதியின் கைப்பிடித்தேன்
ஆயுதமாய் எழுதுகோல்
எடுத்தேன்!
என் எழுத்து யாவற்றையும்
திருத்துமோ இல்லையோ?
திருந்துபவர்கள் திருந்தட்டும்!
அதுவரை என் எழுதுகோல்
எழுதட்டும்!
என் எழுத்து தொடரட்டும்!